Tuesday 17 September 2013

ப்ரியாமணி actress priyamani interview

500 ரூபாய் சம்பளம் வாங்கிய ப்ரியாமணி

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
சினிமாவில் முதன் முறையாக 500 ரூபாய் சம்பளம் வாங்கிய ரகசியத்தினை வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரியாமணி.
கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் முத்தழகியாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

தற்போது இவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாததால் குத்துப்பாடலுக்கு கால்பதித்துள்ளார்.

இவர் தனக்கு பிடித்த விடயங்களை பட்டியலிட்டு பேட்டி ஒன்றினை அளித்துள்ளர்.

பிடித்த விஷயங்களை பட்டியலிட்டு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி: உங்களுக்கு பிடித்த பாடகர்?

பதில்: ஹரிகரன், சங்கர் மகாதேவன், கார்த்திக், இவர்கள் பாடல்களை விரும்பி கேட்பேன்.

கேள்வி: உங்களுக்கு பிடித்தது?

பதில்: என் கண்களும், சிரிப்பும் ரொம்ப பிடிக்கும். எனக்கு நல்ல குணம் இருக்கிறது. அதையும் ரசிக்கிறேன்.

கேள்வி:பிடித்த நடிகர்கள்?

பதில்: கமலஹாசன், ஸ்ரீதேவி, அமீர்கான்.

கேள்வி: ஓய்வை எப்படி கழிப்பீர்கள்?

பதில்: டி.வி. பார்ப்பேன். நண்பர்களை சந்திப்பேன்.

கேள்வி: மறக்க முடியாத பாராட்டு?

பதில்: பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது எனக்கு கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பாராட்டினார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெரிய பாராட்டு ஜூனியர் என்.டி.ஆர். நான் நன்றாக நடனம் ஆடுவதாக பாராட்டினார். அதுவும் மறக்க முடியாது.

கேள்வி: உங்கள் அடுத்த ஆசை?

பதில்: மேக்கப் போடாமல் நடிக்க வேண்டும்.

கேள்வி: ரசிகர்களுக்கு உங்களைப் பற்றி தெரியாத விஷயம்?

பதில்: நான் சினிமாவில் வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய். இது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இதுவரை இருந்தது.

கேள்வி: பார்ட்டிக்கு போவீர்கள்?

பதில்: நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்வது உண்டு.

கேள்வி: பிடித்த உணவு?

பதில்: ரவா தோசை சாப்பிடுவேன். பிரியாணியும் விரும்பி சாப்பிடுவேன்.

கேள்வி: கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும்?

பதில்: எனக்கு கணவராக வருபவருக்கு திறமையாக பேச தெரியனும், தங்கு, தடை இல்லாமல் பேச வேண்டும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கனும். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

Popular Posts

 
Copyright © . LOVE - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger