Wednesday 2 October 2013

பகிருங்கள்... உதவுங்கள் ... please help share your friends

பகிருங்கள்... உதவுங்கள் ...
by Marikumar

சுதா.... அன்பு தோழி.. பழைய அலுவலக நண்பணின் மனைவியும் கூட .. புன்னகை பூ ..ஓயாமல் சிரிப்பவள்.. எப்போது சென்றாலும் சாப்பாட்டில் அன்பையும் சேர்த்து சமைத்து பரிமாறுபவள்... எனக்கொரு பிரச்சினை வந்த போது சளைக்காமல் போனில் , நேரில் என ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தவள்... அவளுக்கும் கணவனுக்கும் ஏதோ மனஸ்தாபம் வந்தபோது இரு வருடமாக என்னிடம் என் நண்பனை குறை கூற பயந்து தன்னை ஒளித்து கொண்ட நாகரீகம் தெரிந்தவள் ...

இத்தனை நாளுக்கு பின் என் நண்பனிடமிருந்து போன்.. சுதா மிகவும் கவலைக்கிடம் என்று செய்தி வர ஓடோடி சென்றோம்... புன்னகை அழகி இருபத்தெட்டு வயது பெண் பத்துவயது பெண் போன்ற உருவில் ஒரேயடியாக உருமாறி கட்டிலோடு ஓட்டிக்கிடந்தாள்... இரண்டு சிறுநீரகமும் பழுது அடைந்து விட்டது ... டாக்டர்கள் கை விரிக்க அரசு மருத்துவமனையின் ஒரு மூலையில் கிடந்தாள் ...

நெஞ்சே வெடித்து விட்டது .. மனது பெரும்பாரமாகிவிட்டது .. அப்பாவி பெண்ணுக்கு கடவுள் தந்த பரிசை காணும்போது கடவுளையே திட்ட தோணுகிறது .... இன்னமும் பாதி நேரம் நினைவில்லாமல் இருப்பவள் நினைவு திரும்பியவுடன் நம்பிக்கையோடு சொல்கிறாள்...

" சாகவெல்லாம் மாட்டேண்டா... கண்டிப்பா திரும்ப வருவேன் " எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்.. ஆனால் அவள் உடல்நிலை மிக கவலைக்கிடம் ... நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்வு உள்ளது என்பதை அவளுக்கு நாம் கொஞ்சமாவது கருணை காட்டலாமே...

பிளீஸ் நண்பர்களே.. அவளுக்கு சிறுநீரகம் தர ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிரார், அதற்க்கான செலவுகள் சுமார் பத்து லட்சம் போல ஆகுமாம் ..எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்துவிட்டு வந்தோம் ...

எத்தனையோ நண்பர்கள் எவ்வள்வோ செலவு செய்கிறோம்.. ஒவ்வொருவரும் ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் கூட அவள் உயிர் பிழைப்பாள். உங்களால் முடிந்தவர்கள் அவள் அக்கவுண்டுக்கு சிறு தொகை அனுப்பி உதவுங்கள்..

நன்றி உள்ளங்களே.. எல்லோரும் வேண்டுங்கள் .. மனிதனே தெய்வம்.. அவனை விட உதவ தெய்வம் யாருமில்லை. அன்பே சிவம்..

Name : D.Sudha

Her account no : 170901000005513

Bank : Indian Overseas Bank ( Rathinapuri branch, Coimbatore )

IFSC code : IOBA0001709 Contact : Aasaithambi (HUsband),

Ph: 9894135368 Mr. Aasai thambi H/O Sudha, 28, Krishnaraj Colony, Siddha Thottam, Ganapathy, Coimbatore - 6410066

Hospital Name: Sthyam Kidney care center

Hospital Phone: 0422 2400401

தமிழால் இணைவோம்

Nagaraj Sweet

Source: Facebook
Share |

Show commentsOpen link

0 comments:

Post a Comment

Popular Posts

 
Copyright © . LOVE - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger