ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸில் வருகிறார் தமிழ்நாட்டு தாதா ‘அருவா’ அழகுசுந்தரம்!
ஷாரூக்கானின் ‘எதிர்பார்க்கப்பட்ட’ சென்னை எக்ஸ்பிரஸ் தயாராகி விட்டது. இந்தப் படம், ஒரு ஆண்டுக்குப் பின் திரைக்குவரும் ஷாரூக்கான் படம் என்பதால் மட்டும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு அல்ல.ஷாரூக்கான் – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து இதற்குமுன் வெளியான ‘ஓம் ஷாந்தி ஓம்’ சூப்பர் ஹிட் படம். அதனாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உண்டு. அடுத்து, ரோகித் ஷெட்டியின் டைரக்ஷன். இவரது சமீபத்தைய எந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் சோடை போனதில்லை.
இதனால், சென்னை எக்ஸ்பிரஸ் திரைக்கு வரும்போது (ஆகஸ்ட் 8), டிக்கெட் விலைகளை உயர்த்த போவதாக இப்போதே அறிவித்துள்ளார்கள். மும்பையில் டிக்கெட் கட்டணங்கள் வார நாட்களில் 40%, வார இறுதி நாட்களில் 20% அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சரி. இவ்வளவுதான் எதிர்பார்ப்பா? நம்மாட்களுக்கு வேறு ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது. படத்தின் பெயரிலேயே சென்னை உள்ளதல்லவா? ஹரோயின் கேரக்டர் தமிழ் பெண்! அதுவும், தமிழ் நாட்டு தாதா ஒருவரின் மகள்!!
சும்மாவே படம் ஆக்ஷன் காமெடி படம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஹீரோயினின் தந்தை வேறு தமிழ்நாட்டு தாதா என்றால், காமெடி எதைப்பற்றி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளுங்களேன். தமிழர்களை வைத்து காமெடி கீமெடி பண்ணப் போகிறார்களா?
ஹீரோயினின் தந்தை, தமிழ்நாட்டு தாதா வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ். படத்தில் அவருடைய கேரக்டரின் பெயரை பார்த்தாலே, பெயரை வைத்தே கிண்டல் அடிப்பார்கள் போலிருக்கிறது. சத்யராஜ் கேரக்டரின் பெயர்: துர்க்கேஸ்வர அழகு சுந்தரம்!
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஸ்டில்களில் நாம் தேர்ந்தெடுத்த சிலவற்றை கீழேயுள்ள இணைப்பில் கொடுத்துள்ளோம். ஷாருக்கான் அருவா சகிதம் போஸ் கொடுப்பதை பார்த்தால், நம்ம அழகு சுந்தரத்தின் ஆயுதம் அருவாதான் என்பது புரிகிறது. ஹரோயின் தமிழ்ப் பொண்ணு, லுங்கி அணிந்து டான்ஸ் ஆடுகிறார் என்றும் தெரிகிறது.
படம் வெளியானவுடன், எந்த கட்சி தலைவர் ‘தமிழர்கள் சார்பில்’ என்று கதக்களி ஆடப்போகிறாரோ!
0 comments:
Post a Comment